articles

img

இந்திய பெருங்கடலில் எதிர்மறை ஈர்ப்பு விசை

இந்திய பெருங்கடலில் மிகப்பெரும் ஈர்ப்புவிசை துளை காணப்படுகிறது. இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மறைந்த டெத்தி பெருங்கடலின் மிச்சங் களால் உண்டாகியிருக்கலாம் என இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். டெத்தி தட்டுகள் ஏற்படுத்தும் இடையூறுகளால் இந்திய பெருங்கடலின் அடியில் எதிர்மறை ஈர்ப்பு விசை உண்டாகியிருக்கும். பெரும் ஆப்பிரிக்க விரிசல் வேகப் பகுதிஎன அழைக்கப்படும் இடத்தில் இந்த இடையூறுகள் ஏற்பட்டு கடலின் அடியில் புளூம்ஸ் எனப்படும் சிறகு போன்ற படிவங்கள் ஏற்பட்டுள்ளன. இங்கு பூமியின் ஈர்ப்பு விசை மிகப் பலவீனமாக உள்ளது. இந்தப் பகுதி 2 மில்லியன் சதுர மைல் பரப்பிலும் பூமியின் மேற்பரப்பிலிருந்து 600 மைல் ஆழத்திலும் காணப்படுகிறது.